search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்ஜி குளோஸ்டர்
    X
    எம்ஜி குளோஸ்டர்

    எம்ஜி குளோஸ்டர் கார் ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளியாகும்

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் கார் ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எம்ஜி குலோஸ்டர் எஸ்யுவி மாடல் ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட இருக்கிறது.  இதனை எம்ஜி மோட்டார் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

    புதிய எம்ஜி குளோஸ்டர் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எம்ஜி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. தற்சமயம் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய எஸ்யுவி திட்டமிட்டப்படி வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    எம்ஜி குளோஸ்டர்

    எம்ஜி குளோஸ்டர் மாடல் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் நான்காவது வாகனம் ஆகும். முன்னதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டார், இசட்எஸ் இவி மற்றும் ஹெக்டார் பிளஸ் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட்டு இருக்கிறது. இவற்றில் ஹெக்டார் பிளஸ் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது.

    புதிய எம்.ஜி. குளோஸ்டர் கார் எம்.ஜி. நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது

    எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 220 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×