search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கியா செல்டோஸ்
    X
    கியா செல்டோஸ்

    கியா செல்டோஸ் இந்திய வெளியீட்டு தேதி

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செல்டோஸ் எஸ்.யு.வி. கார் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி. காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. கியா செல்டோஸ் கார் இந்திய விற்பனை ஆகஸ்டு 22 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கியா செல்டோஸ் கார் சர்வதேச சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

    கொரிய பிராண்டான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் வெளியிடும் முதல் வாகனமாக கியா செல்டோஸ் இருக்கிறது. தற்சமயம் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியா முழுக்க விற்பனை மையங்களை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

    கியா செல்டோஸ் கார் முற்றிலும் புதிய வடிவமைப்பில் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. இதன் முன்புறம் டைகர் கிரில், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள். வழங்கப்பட்டுள்ளன. முன்புற பம்ப்பரிஸ் ஸ்போர்ட் தீம் மற்றும் சென்ட்ரல் ஏர் இன்டேக் ஃபாக் லேம்ப்களில் வழங்கப்பட்டுள்ளது.

    கியா செல்டோஸ்

    புதிய எஸ்.யு.வி. கார்: 115 பி.ஹெச்.பி. மற்றும் 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் CRDi டீசல் யூனிட் மற்றும் 140 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. டர்போ-பெட்ரோல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    அனைத்து என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு ஏ.டி., ஐ.வி.டி. மற்றும் 7-ஸ்பீடு டி.சி.டி. என மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது. 
    Next Story
    ×