search icon
என் மலர்tooltip icon

    பைக்

    225சிசி என்ஜினுடன் புதிய டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    225சிசி என்ஜினுடன் புதிய டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

    • டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ரோனின் மோட்டார்சைக்கிள் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த மாடல் 225சிசி என்ஜின் கொண்டு இருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரோனின் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    டிவிஎஸ் ரோனின் சிங்கில் டோன் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம்

    டிவிஎஸ் ரோனின் டூயல் டோன் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 500

    டிவிஎஸ் ரோனின் ட்ரிபில் டோன் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரத்து 750

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    புதிய டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் ரக மாடல் ஆகும். இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டி.ஆர்.எல்., இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், பிளாக் நிற என்ஜின் கவுல், சிங்கில்-பீஸ் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், டூயல் டோன் ஃபினிஷ் கொண்டு இருக்கிறது.

    இந்த மாடலில் முழு எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிவிஎஸ் ரோனின் மாடலில் 225.9சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.1 ஹெச்.பி. பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ரோனின் மாடல் ஹோண்டா CB350 RS மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×