search icon
என் மலர்tooltip icon

    பைக்

    முன்பதிவில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்திய டிரையம்ப் ஸ்பீடு 400
    X

    முன்பதிவில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்திய டிரையம்ப் ஸ்பீடு 400

    • டிரையம்ப் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலின் வெளியீடு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.
    • இரு மாடல்களிலும் 398.15சிசி, லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400 X மாடல்களுக்கான முன்பதிவை இந்திய சந்தையில் துவங்கி விட்டது. லண்டனில் நடைபெற்ற சர்வதேச வெளியீட்டை ஒட்டி, இந்திய முன்பதிவை ஏற்கனவே துவங்கி இருந்தது. இந்த நிலையில், புதிய மாடல்களின் முன்பதிவு துவங்கிய பத்து நாட்களில் இந்த மாடல்களை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சமீபத்தில் தான் டிரையம்ப் ஸ்பீடு 400 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில், இதன் விலை ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம் தான் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    கடுமையான போட்டியை ஏற்படுத்தும் விலை காரணமாக, இந்த மாடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தற்போதைக்கு டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மாடலை மட்டுமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. டிரையம்ப் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலின் வெளியீடு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இரு மாடல்களிலும் 398.15சிசி, லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்பி பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×