என் மலர்
பைக்

பைக் வாங்குவோருக்கு இலவச அக்சஸரீஸ் வழங்கும் நிறுவனம் - வெளியான அறிவிப்பு
- யூனிட்டுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
- முன்புறத்தில் 43மிமீ அப்சைடு-டவுன் பிக் பிஸ்டன் ஃபோர்க்குகளையும் பின்புறத்தில் கியாஸ் மோனோஷாக் RSU கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ஸ்பீட் 400 விற்பனையை அதிகரிக்க டிரையம்ப் முயற்சித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மாடல் வாங்குவோருக்கு ரூ.7,600 மதிப்புள்ள அக்சஸரீக்களை இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முதல் முறையாக வாங்குபவர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை பொருந்தும்.
இந்த சலுகையின் கீழ், டிரையம்ப் வாடிக்கையாளர்கள் டேங்க் பேட், டிரான்ஸ்பேரண்ட் விண்ட்ஸ்கிரீன், முழங்கால் பேட்கள் மற்றும் லோயர் எஞ்சின் பார் உள்ளிட்டவைகளைப் பெறலாம்.
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கில் 398.15 சிசி, லிக்விட்-கூல்டு, 4 வால்வுகள் கொண்ட DOHC, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட்டுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது முறையே 40 ஹெச்பி பவர் மற்றும் 37.5 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
அம்சங்களை பொருத்தவரை டிரையம்ப் ஸ்பீட் 400 ஒரு ஹைப்ரிட் ஸ்பைன் டியூபுலர் ஸ்டீல் ஃபிரேமை அடிப்படையாகக் கொண்டது. இது முன்புறத்தில் 43மிமீ அப்சைடு-டவுன் பிக் பிஸ்டன் ஃபோர்க்குகளையும் பின்புறத்தில் கியாஸ் மோனோஷாக் RSU கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை 300மிமீ நிலையான டிஸ்க்குகள், முன்புறத்தில் நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் மற்றும் பின்புறத்தில் 230மிமீ நிலையான டிஸ்க், ஃபுளோட்டிங் காலிபர் மூலம் செய்யப்படுகிறது.
இந்த பிராண்ட் ஸ்பீட் 400 க்கு நான்கு வண்ண விருப்பங்களை வழங்குகிறது. இதில் ரேசிங் எல்லோ/மெட்டாலிக் வைட், ஃபேண்டம் பிளாக்/பியூட்டர் கிரே, பியல் மெட்டாலிக் வைட்/பியூட்டர் கிரே மற்றும் ரேசிங் ரெட்/பியூட்டர் மெட்டாலிக் வைட் ஆகியவை அடங்கும். டிரையம்ப் ஸ்பீட் 400 மாடலின் விலை ரூ.2.26 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
இந்திய சந்தையில் டிரையம்ப் நிறுவனம் ஸ்பீட் 400-ஐ தவிர, ஸ்பீட் T4, ஸ்கிராம்ப்ளர் 400 XC மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400 X உள்ளிட்ட மூன்று 400சிசி கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை விறபனை செய்து வருகிறது. இருப்பினும், இந்த மாடல்களுக்கு நிறுவனம் எந்த இலவச அக்சஸரீக்களை வழங்கவில்லை. மேலும் இந்த சலுகை டிரையம்ப் ஸ்பீட் 400 மாடலுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது.