என் மலர்tooltip icon

    பைக்

    Suzuki | சத்தமின்றி வந்த புது அப்டேட்... சுசுகியின் சூப்பர் சம்பவம்..!
    X

    Suzuki | சத்தமின்றி வந்த புது அப்டேட்... சுசுகியின் சூப்பர் சம்பவம்..!

    இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    சுசுகி நிறுவனம் தனது பிரபலமான ஸ்கூட்டர் மாடல்- பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலின் புது நிற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX வேரியண்ட் தற்போது முற்றிலும் புதிய பியர்ல் கிரேஸ் வைட் நிறத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் மாடல்- மெட்டாலிக் ராயல் பிரான்ஸ் மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் நம்பர் 2 என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பியர்ஸ் கிரேஸ் வைட் நிற ஆப்ஷனில் வெள்ளை மற்றும் சாம்பல் என இருவித நிறங்கள் சேர்ந்த எடிஷன் இளம் வாடிக்கையாளர்களை கவரும் என்று தெரிகிறது. நிறம் தவிர இந்த ஸ்கூட்டரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அதன்படி சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் மாடலிலும் 124சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 8.58 ஹெச்.பி. பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டரில் சுசுகி நிறுவனம் ஈகோ பெர்ஃபார்மன்ஸ் ஆல்ஃபா எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது ஸ்கூட்டரின் செயல்திறனை மேம்படுத்தும்.

    மேலும், இந்த ஸ்கூட்டரில் என்ஜின் ஆட்டோ ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம், சுசுகி ஈசி ஸ்டார்ட் மற்றும் சைலண்ட் ஸ்டார்ட்டர் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் ப்ளூடூத் வசதி கொண்ட டிஜிட்டல் எல்.சி.டி. கன்சோல் மற்றும் சுசுகி ரைடு கனெக்ட், எல்.இ.டி. லைட்டிங், 21.5 லிட்டர் அன்டர்-சீட் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    பர்க்மேன் ஸ்டிரீட் மாடலின் EX வேரியண்டில் மட்டும் 12-இன்ச் ரியர் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து பிரபல ஸ்கூட்டர் மாடலாக விளங்குகிறது. சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடல் ரூ. 1,07,902 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த ஸ்கூட்டர் நாடு முழுக்க சுசுகி விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    Next Story
    ×