search icon
என் மலர்tooltip icon

    பைக்

    உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டிய சுசுகி அக்சஸ் 125
    X

    உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டிய சுசுகி அக்சஸ் 125

    • சுசுகி அக்சஸ் 125 மாடல் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • சுசுகி அக்சஸ் 125 மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் உள்ளது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 125சிசி ஸ்கூட்டர், அக்சஸ் 125 உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. ஜப்பானை சேர்ந்த சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 50 லட்சமாவது அக்சஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள கெர்கி டௌலா ஆலையில் இருந்து வெளியானது.

    இருசக்கர வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும், சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் அக்சஸ் 125 இருக்கிறது. இந்திய சந்தையில் சுசுகி அக்சஸ் 125 மாடல்- ஸ்டான்டர்டு, ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ரைடு கனெக்ட் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    இதன் டாப் என்ட் வேரியன்ட் பெயருக்கு ஏற்றார்போல் ப்ளூடூத் மாட்யுல் மூலம் மிஸ்டு கால் அலெர்ட்கள், போன் பேட்டரி லெவல் இன்டிகேட்டர், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

    சுசுகி அக்சஸ் 125 மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.58 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடலில் ஸ்டீல் வீல்கள், டிரம் பிரேக்குகள் உள்ளன.

    இதன் டாப் என்ட் வேரியன்ட்களில் அலாய் வீல்கள், முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய இருசக்கர வாகன சந்தையின் 125சிசி ஸ்கூட்டர்கள் பிரிவில் அக்சஸ் 125 மட்டுமின்றி பர்க்மேன் ஸ்டிரீட், பர்க்மேன் ஸ்டிரீட் EX மற்றும் அவெனிஸ் உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    Next Story
    ×