என் மலர்
பைக்

400 கிமீ ரேஞ்ச் வழங்கும் புது மாடல்... சம்பவம் செய்த சிம்பிள் எனர்ஜி..!
- புதுவரவு மாடலான சிம்பிள் அல்ட்ரா 400 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது.
- இந்தியாவில் இதுவரை பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களில் உள்ளதை விட மிகப்பெரியது ஆகும்.
சிம்பிள் எனர்ஜி நிறுவனம், சிம்பிள் அல்ட்ரா என்ற புதிய ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும், சிம்பிள் ஒன் மற்றும் சிம்பிள் ஒன்.எஸ். ஆகியவற்றை ஜென் 2 வடிவத்திற்குப் அப்டேட் செய்து அதன் ஜென் 2 ஸ்கூட்டர் சீரிசை அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம் அதன் போர்ட்ஃபோலியோவை நான்கு தனித்துவமான மாடல்களுக்கு கொண்டு செல்வதாக அந்நிறுவனம் கூறுகிறது.
புதிய சிம்பிள் அல்ட்ரா மாடல் முழு சார்ஜில் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் விலை பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. 236 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் சிம்பிள் ஒன் 4.5 கிலோவாட் மாடலின் விலை ரூ. 1.69,999 என்றும் 265 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் சிம்பிள் ஒன் 5 கிலோவாட் மாடலின் விலை ரூ. 1,77,999என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
190 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் சிம்பிள் ஒன்.எஸ். ஜென் 2 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 1,39,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை முடிந்ததும் இதன் விலை ரூ. 1,49,999 லட்சமாக உயரும்.
புதுவரவு மாடலான சிம்பிள் அல்ட்ரா 400 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. இதற்காக இந்த மாடலில் அந்நிறுவனம் 6.5kWh பேட்டரி வழங்கியிருக்கிறது. இது இந்தியாவில் இதுவரை பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களில் உள்ளதை விட மிகப்பெரியது ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை சிம்பிள் ஒன் ஜென் 2 ஸ்கூட்டர்களில் 7 இன்ச் தொடுதிரை உள்ளது, அதே நேரத்தில் ஒன்.எஸ். ஜென் 2 மாடலில் டச் ஸ்கிரீன் வசதி இல்லை. இரண்டுமே LTE மற்றும் ப்ளூடூத்துடன் கூடிய 5G e-SIM ஐப் பெறுகின்றன. இத்துடன் நேவிகேஷன் வசதி வழங்குகிறது. இதற்காக சிம்பிள் ஒன் ஜென் 2 மாடலில் பில்ட்-இன் மேப்ஸ், ஒன்.எஸ். ஜென் 2 மாடலில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படுகிறது.
இவைதவிர ஃபைண்ட் மை வெஹிக்கிள், TPMS, பார்க் அசிஸ்ட், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் மற்றும் IP65 தர பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சிம்பிள் ஒன் ஜென் 2 (4.5kWh), சிம்பிள் ஒன் ஜென் 2 (5kWh) மற்றும் சிம்பிள் ஒன்.எஸ். ஜென் 2 ஆகிய மூன்று மாடல்கள் உடனடியாக வாங்கக் கிடைக்கின்றன என்று சிம்பிள் எனர்ஜி கூறுகிறது.






