search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விலை ரூ. 11 லட்சம்.. அப்படி இந்த ஹோண்டா பைக்-ல என்ன இருக்கு தெரியுமா?
    X

    விலை ரூ. 11 லட்சம்.. அப்படி இந்த ஹோண்டா பைக்-ல என்ன இருக்கு தெரியுமா?

    • புதிய ஹோண்டா பைக் ஆஃப்ரிக்கா டுவின் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
    • இதில் 755சிசி பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல் XL750 டிரான்சால்ப் என்று அழைக்கப்படுகிறது. இது ஹோண்டாவின் பிரபல ஆஃப்ரிக்கா டுவின் மாடலின் சிறிய வெர்ஷன் ஆகும். இந்தியாவில் ஹோண்டா XL750 டிரான்சால்ப் விலை ரூ. 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பது அறிமுக விலை. அந்த வகையில், இந்த மோட்டார்சைக்கிள் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும். முதற்கட்டமாக இந்த மாடலின் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஹோண்டா பிக்விங் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

    டிசைனை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிள் ஆஃப்ரிக்கா டுவின் மாடலை தழுவியே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதில் கூர்மையான ஹெட்லேம்ப்கள், ஆங்குலர் செமி ஃபேரிங், உயரமான விண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 இன்ச் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வாய்ஸ் அசிஸ்ட் அம்சங்கள், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடு-பை-வயர், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ஐந்துவிதமான ரைடிங் மோட்கள் உள்ளன.

    இதில் உள்ள 755சிசி பேரலல் டுவின் என்ஜின் 90 ஹெச்.பி. பவர், 75 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு ஷோவா யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், ப்ரோ-லின்க் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் டூயல் டிஸ்க், பின்புறம் சிங்கில் டிஸ்க் உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா XL750 டிரான்சால்ப் மாடல் ராஸ் வைட் மற்றும் மேட் பலிஸ்டிக் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் வினியோகம் அடுத்த மாதம் துவங்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×