search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்தியாவில் அறிமுகமான புதிய ஹோண்டா பைக்.. விலை எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவில் அறிமுகமான புதிய ஹோண்டா பைக்.. விலை எவ்வளவு தெரியுமா?

    • புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டு வந்தது.
    • புதிய SP160 மாடலில் 162.71சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கம்யுட்டர் மாடலை SP160 என்ற பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது SP மோட்டார்சைக்கிள் ஆகும். முன்னதாக ஹோண்டா SP125 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது SP160 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கம்யுட்டர் டிசைன் கொண்டிருக்கும் போதிலும், ஹோண்டா SP160 மாடல் இளமை மிக்க தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய ஹோண்டா SP160 மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய SP160 மாடலில் 162.71சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13.2 ஹெச்பி பவர், 14.59 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. யுனிகான் மாடலின் என்ஜின் திறன், போர் ஸ்டிரோக் மற்றும் செயல்திறன் உள்ளிட்டவை ஒரே மாதிரி இருக்கிறது. அந்த வகையில், இரு மாடல்களிலும் ஒரே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கலாம்.

    அம்சங்களை பொருத்தவரை புதிய SP160 மாடலில் முழுமையான டிஜிட்டல் கன்சோல், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப்மீட்டர், சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ஃபியூவல் லெவல் ரீட்-அவுட், கடிகாரம் மற்றும் சராசரி எரிபொருள் பயன்பாட்டு விவரங்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், பல்பு இன்டிகேட்டர்கள் உள்ளன.

    புதிய ஹோண்டா பைக்கின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு 276mm முன்புற டிஸ்க், பின்புறம் 220mm டிஸ்க் அல்லது 130mm ரியர் டிரம் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 12 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹோண்டா SP160 சிங்கில் டிஸ்க் கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 என்றும் இரட்டை டிஸ்க் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 21 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரும் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா SP160 மாடல் பஜாஜ் பல்சர் 150 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×