search icon
என் மலர்tooltip icon

    பைக்

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக புதிய பிளாட்ஃபார்ம் உருவாக்கும் ஹோண்டா
    X

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக புதிய பிளாட்ஃபார்ம் உருவாக்கும் ஹோண்டா

    • ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் கர்நாடகாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எலெக்ட்ரிக் மோட்டார்களை ஹோண்டா நிறுவனமே உருவாக்க இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றிய தகவல்களை தெரிவித்து இருக்கிறது. இதற்காக ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய இ பிளாட்ஃபார்மை அறிவித்துள்ளது. இது ஃபிக்சட் பேட்டரி, கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி மற்றும் மிட் ரேஞ்ச் பிரிவு என பல்வேறு விதமான எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    பிராஜக்ட் வித்யுட் எனும் திட்டத்தின் கீழ் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முதல் வாகனமாக மிட் ரேஞ்ச் எலெக்ட்ரிக் மாடல் இருக்கும். இரண்டாவது மாடல் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனை கொண்டிருக்கும். இது ஹோண்டா மொபைல் பவர் பேக் இ பயன்படுத்தும்.

    புதிய வாகனங்களை அறிமுகம் செய்வதோடு, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் நாடு முழுக்க சார்ஜிங் உள்கட்டமைப்புகளை கட்டமைக்க இருக்கிறது. இதற்காக நாடு முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிகமான நெட்வொர்க் டச்பாயிண்ட்களில் சார்ஜிங் மையங்களை இன்ஸ்டால் செய்ய இருக்கிறது.

    இதுதவிர பேட்டரி மாற்றும் மையங்களை பெட்ரோல் நிலையங்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் மற்றும் இதர பொது இடங்களில் கட்டமைக்க ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள நரசபுறா ஆலை முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த இருக்கிறது.

    இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உபகரணங்களான பேட்டரிகள் மற்றும் பிசியுக்களை பயன்படுத்தவுள்ளன. மேலும் இந்த வாகனங்களுக்கான மோட்டாரை ஹோண்டா நிறுவனமே உருவாக்க இருக்கிறது.

    Next Story
    ×