search icon
என் மலர்tooltip icon

    பைக்

    கீலெஸ் வசதி, அலாய் வீல் கொண்ட ஹோண்டா டியோ இந்தியாவில் அறிமுகம்
    X

    கீலெஸ் வசதி, அலாய் வீல் கொண்ட ஹோண்டா டியோ இந்தியாவில் அறிமுகம்

    • ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • டியோ புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் உள்ளன.

    ஹோண்டா நிறுவனத்தின் பிரபல டியோ ஸ்கூட்டரின் முற்றிலும் புதிய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெர்ஷன் ஹோண்டா டியோ H ஸ்மார்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 77 ஆயிரத்து 712, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய டியோ வெர்ஷனில் H ஸ்மார்ட் அப்கிரேடுகள் செய்யப்பட்டு இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி டியோ ஸ்கூட்டரின் புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. முன்னதாக இதே ஆப்ஷன்கள் ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.

    ஹோண்டா டியோ H ஸ்மார்ட் வெர்ஷனின் விலை அதன் OBD 2 அப்டேட் செய்யப்பட்ட மாடலை விட ரூ. 3 ஆயிரத்து 500 வரை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ OBD 2 வெர்ஷனும் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் சற்றே குறைந்த விலை கொண்டிருக்கிறது. இதில் ஹாலோஜன் பல்பு கொண்ட ஹெட்லைட், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் பிளாக்டு-அவுட் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டீலக்ஸ் வேரியண்டில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வெளிப்புறம் ஃபியூவல் ஃபில்லர் கேப், தங்க நிறம் கொண்ட அலாய் வீல்கள், 3-ஸ்டெப் இகோ இன்டிகேட்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய மாற்றங்கள் காரணமாக ஹோண்டா டியோ விற்பனை மெட்ரோ மற்றும் கிராம புறங்களில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

    Next Story
    ×