என் மலர்
பைக்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பைக்குகளின் விலை ஜூலை 1 முதல் உயர்கிறது
- 2023 மே மாதத்தில் இந்நிறுவனம் 5.08 லட்சம் 2 சக்கர வானங்களை விற்பனை செய்திருந்தது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் ஸ்பிலெண்டர், பேஷன் ப்ரோ, கிளாமர் ஆகிய பைக்குகள் அதிகளவில் விற்பனையாகின்றன.
மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வாகனங்களின் விலைகளை உயர்த்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் வாகனத்தை பொறுத்து 1500 வரை விலை உயர் வாய்ப்புள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்பிலெண்டர், பேஷன் ப்ரோ, கிளாமர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களையும் இந்த விலையேற்றம் பாதிக்கும்.
2023 மே மாதத்தில் இந்நிறுவனம் 5.08 லட்சம் 2 சக்கர வானங்களை விற்பனை செய்திருந்தது. கடந்த மே மாதம் இந்நிறுவனம் 4.79 லட்சம் 2 சக்கர வானங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை விட 7% குறைவாகும்.
Next Story






