என் மலர்

  பைக்

  இந்தியாவில் அறிமுகமான புது டுகாட்டி பைக் - விலை எவ்வளவு தெரியுமா?
  X

  இந்தியாவில் அறிமுகமான புது டுகாட்டி பைக் - விலை எவ்வளவு தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டுகாட்டி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புது ஸ்கிராம்ப்ளர் பைக்கை அறிமுகம் செய்தது.
  • இந்த ஸ்கிராம்ப்ளர் மாடல் டூயல் பெயிண்ட் நிறங்களில் கிடைக்கிறது.

  டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என அழைக்கப்படுகிறது. புது மாடல் டுகாட்டி நிறுவனத்தின் ஐகான், ஐகான் டார்க், நைட்ஷிப்ட் மற்றும் டெசர்ட் ஸ்லெட் போன்ற மாடல்களின் வரிசையில் இணைந்துள்ளது. டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.

  ஏற்கனவே ஸ்கிராம்ப்ளர் ஐகான், ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க், ஸ்கிராம்ப்ளர் நைட்ஷிப்ட், ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் போன்ற மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலும் இந்த வரிசையில் இணைந்து இருக்கிறது.


  டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் எண்ட்ரி லெவல் மாடல் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க். இந்த மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். ஸ்கிராம்ப்ளர் சீரிசில் விலை உயர்ந்த, டாப் எண்ட் மாடல் என்ற பெருமையை புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் பெற்று இருக்கிறது.

  புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் எடை 180 கிலோ ஆகும். இதில் 803சிசி, ஏர் கூல்டு, இரு வால்வுகள் கொண்ட எல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 73 ஹெச்.பி. பவர், 66.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

  Next Story
  ×