என் மலர்tooltip icon

    பைக்

    RE இமாலயனுக்குப் போட்டியாக மிரட்டல் என்ட்ரி..! KTM-இன் புதிய அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்
    X

    RE இமாலயனுக்குப் போட்டியாக மிரட்டல் என்ட்ரி..! KTM-இன் புதிய அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்

    • முன்பக்கம் 21-இன்ச் மற்றும் பின்பக்கம் 18-இன்ச் கொண்ட ஸ்போக் வீல்கள் உள்ளன.
    • இது ஸ்டாண்டர்ட் மாடலை விட சுமார் 6 கிலோ குறைவாகும்.

    KTM நிறுவனம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஃப்-ரோட் ரக பைக்கான KTM 390 Adventure R மாடலை இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    சாதாரண அட்வென்ச்சர் மாடல்களை விட இது கடினமான பாதைகளில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இது தற்போது விற்பனையில் இருக்கும் 'Standard' 390 Adventure மாடலைவிட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 'Tubed' டயர்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு பக்கமும் 230mm travel கொண்ட WP Apex சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது மேடு பள்ளங்களைச் சமாளிக்க உதவுகிறது.

    முன்பக்கம் 21-இன்ச் மற்றும் பின்பக்கம் 18-இன்ச் கொண்ட ஸ்போக் வீல்கள் உள்ளன. இதில் Mitas Enduro Trail டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    ஆஃப்-ரோட் வசதிக்காக இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 272mm ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் இருக்கை உயரம் (Seat Height) 870mm ஆக உள்ளது.

    என்ஜின் 399cc, லிக்யுட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின், 46 hp பவர் மற்றும் 39 Nm டார்க், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதியுடன் உள்ளது.

    இதன் எடை 176 கிலோ. இது ஸ்டாண்டர்ட் மாடலை விட சுமார் 6 கிலோ குறைவாகும்.

    ரைடு-பை-வயர், கார்னரிங் ஏபிஎஸ், ஆஃப்-ரோட் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

    இது தற்போது பிரத்யேகமான வெள்ளை மற்றும் ஆரஞ்சு (White/Orange) கலந்த டூயல் டோன் நிறத்தில் கிடைக்கிறது.

    KTM 390 Adventure R மாடல் விலை ரூ.3.78 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 (RE Himalayan 450) போன்ற பைக்குகளுக்குப் பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×