என் மலர்
பைக்

பைக் வெளியீட்டை திடீரென மாற்றிய யெஸ்டி
- எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
- ஆஃப்-ரோடு பயன்முறையில், பின்புற சக்கரத்தில் உள்ள ஏபிஎஸ் முழுமையாக துண்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஜாவா, பிஎஸ்ஏ மற்றும் யெஸ்டியின் தாய் நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ் நாளை மறுநாள் ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த இருந்தது. இது பெரும்பாலும் யெஸ்டி அட்வென்ச்சராக இருக்கலாம். ஆனால் புதிய வடிவமைப்புடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது, புதிய மோட்டார்சைக்கிள் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், வெளியீட்டு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. யெஸ்டி அட்வென்ச்சர் ஒரு வருடத்திற்கு முன்பு, எஞ்சின் மற்றும் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் ஆகஸ்ட் 2024 இல் புதுப்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய மாடல் ஒரு தனித்துவமான வடிவமைப்பு மாற்றத்தைக் காணக்கூடும். இது முந்தைய ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 411 மாடலை போன்ற தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
புதிய மாடலில் எஞ்சின் மற்றும் சேசிஸ் அப்படியே இருக்கும். யெஸ்டி அட்வென்ச்சர் தற்போது 334 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சினை பெறுகிறது. இது 29.68 பிஹெச்பி பவர் கொண்டிருக்கிறது. இது முன்பை விட 0.6 பிஹெச்பி குறைவு ஆகும். ஆனால் டார்க் வெளியீட்டில் எவ்வித மாற்றமும் இல்லாமல், 29.84 என்எம் அப்படியே உள்ளது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ஆன்போர்டு யூஎஸ்பி சார்ஜர், புளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஏபிஎஸ் மற்றும் ரோட், ரெயின் மற்றும் ஆஃப்-ரோடு என மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. ஆஃப்-ரோடு பயன்முறையில், பின்புற சக்கரத்தில் உள்ள ஏபிஎஸ் முழுமையாக துண்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் தற்போது ரூ. 2.10 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விலைகள் ஓரளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யெஸ்டி அட்வென்ச்சர், ஹீரோ எக்ஸ்-பல்ஸ் 210, கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் போன்றவற்றுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.






