search icon
என் மலர்tooltip icon

    பைக்

    2023 கேடிஎம் அட்வென்ச்சர் 390 X இந்தியாவில் அறிமுகம் - விலை இவ்வளவு தானா?
    X

    2023 கேடிஎம் அட்வென்ச்சர் 390 X இந்தியாவில் அறிமுகம் - விலை இவ்வளவு தானா?

    • கேடிஎம் நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் எல்சிடி ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.
    • புதிய 390 அட்வென்ச்சர் X மாடல் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட சற்றே குறைந்த அம்சங்களை கொண்டிருக்கிறது.

    கேடிஎம் இந்தியா நிறுவனம் 390 அட்வென்ச்சர் சீரிசில் புதிய மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் X பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய மாடல், அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட குறைந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த மோட்டார்சைக்கிள் விலையும் சற்றே குறைந்து இருக்கிறது.

    ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆஃப்-ரோட் மோட், ஸ்லிப்பர் கிளட்ச், 12 வோல்ட் யுஎஸ்பி சாக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. சற்றே குறைந்த விலையில் கிடைப்பதால், இந்த மாடலில் ப்ளூடூத் மாட்யுல் மற்றும் டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்படவில்லை. மாறாக எல்சிடி டேஷ்போர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குறைந்த எலெக்ட்ரிக் ரைடர் அம்சங்கள் உள்ளன.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 390 அட்வென்ச்சர் X மாடலில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும் 373.27சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் ஒவர்ஹெட் கேம்ஷாஃப்ட் உள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் ஹார்டுவேர் அம்சங்களும் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கேடிஎம் 390 அட்வென்ச்சர் X மாடலில் 43mm அப்சைட்-டவுன் WP அபெக்ஸ் முன்புற ஃபோர்க்குகள், 10-ஸ்டெப் அட்ஜஸ்ட் வசதி கொண்ட WP ரியர் மோனோ ஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேகிங்கிற்கு முன்yபுறம் ஒற்றை 320mm டிஸ்க் பிரேக், பின்புறம் ஒற்றை 230mm டிஸ்க் உள்ளது. இந்த மாடலிலும் 14.5 லிட்டர் ஃபியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X மோட்டார்சைக்கிள் கேலக்டிக் புளூ மற்றும் டார்க் கல்வேனோ பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பிஎம்டபிள்யூ G 310 GS மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×