search icon
என் மலர்tooltip icon

    பைக்

    2023 கவாசகி Z900RS இந்தியாவில் அறிமுகம்
    X

    2023 கவாசகி Z900RS இந்தியாவில் அறிமுகம்

    • கவாசகி நிறுவனத்தின் புதிய 2023 Z900RS மோட்டார்சைக்கிள் இருவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • கவசாகி Z900RS மாடலிலும் 948சிசி, இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய Z900RS நியோ ரெட்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய கவாசகி Z900RS மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 47 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய Z900RS டிசைன் Z650RS போன்றே காட்சியளிக்கிறது. இதன் ஹார்டுவேர் மற்றும் என்ஜின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை Z900RS மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், டியர்டிராப் வடிவ ஃபியூவல் டேன்க், மெல்லிய டெயில் மற்றும் ரிப்டு பேட்டன் கொண்ட சீட் வழங்கப்படுகிறது. மல்டி-ஸ்போக் அலாய் வீல், க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட வீல் ரிம்களை கொண்டிருக்கும் கவசாகி Z900RS க்ரோம் எக்சாஸ்ட் கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் கவாசகி Z900RS மாடல்- மெட்டாலிக் டியப்ளோ பிளாக்/மெட்டாலிக் இம்பீரியல் ரெட் மற்றும் கேண்டி டோன் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச், ஆல் எல்இடி லைட்னிங் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ரெட்ரோ தீம் கொண்ட இரு அனலாக் டயல், நெகடிவ் எல்சிடி உள்ளது.

    புதிய Z900RS மாடலிலும் Z900 ஸ்டிரீட் மாடலில் உள்ளதை போன்றே 948சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 107 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×