என் மலர்

  பைக்

  2023 கவாசகி வெர்சிஸ் 1000 இந்தியாவில் அறிமுகம்
  X

  2023 கவாசகி வெர்சிஸ் 1000 இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 1000 மாடல் ஒற்றை நிறத்தில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.
  • வெர்சிஸ் 1000 மாடலில் டிசி சாக்கெட் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

  கவாசகி இந்தியா நிறுவனம் 2023 வெர்சிஸ் 1000 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி வெர்சிஸ் 1000 மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 19 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிட்டர் கிளாஸ் அட்வென்ச்சர் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் நிறத்தில் கிடைக்கிறது.

  2023 கவாசகி வெர்சிஸ் 1000 மாடல் தோற்றத்தில் 2022 வெர்சிஸ் போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலிலும் டுவின் பாட் ஹெட்லைட், ஃபேரிங்கில் இண்டகிரேட் செய்யப்பட்ட கார்னரிங் லைட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், ஸ்டெப்-அப் டிசைன், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

  புதிய வெர்சிஸ் மாடல் டூயல் டோன் மெட்டாலிக் மேட் கிராஃபீன்ஸ்டீல் கிரே மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஃபுல் எல்இடி லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், அனலாக் போன்ற டகோமீட்டர் மற்றும் எல்சிடி ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.

  கவாசகி வெர்சிஸ் 1000 மாடலிலும் 1043சிசி, இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்ப்படுகிறது. இந்த என்ஜின் 118.2 ஹெச்பி பவர், 10.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

  Next Story
  ×