search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    WMC250EV எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்
    X
    WMC250EV எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

    மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்

    வைட் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்ஸ் நிறுவனம் சுசுகி ஹயபுசா மாடலை தழுவி புது எலெக்ட்ரிக் பைக் கான்செப்டை உருவாக்கி இருக்கிறது.

    பிரிட்டனை சேர்ந்த வைட் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்ஸ் நிறுவனம் WMC250EV பெயரில் புது எலெக்ட்ரிக் பைக் ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு சுமார் 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    வோக்சான் வாட்மேன் மாடலை கொண்டு கடந்த ஆண்டு மோட்டோ ஜிபி வீரர் மேக்ஸ் பியாகி மணிக்கு 367 கிலோமீட்டர் வேகத்தில் சென்றார். இவரது சாதனையை WMC250EV மாடல் முறியடிக்கும் என கூறப்படுகிறது.

     WMC250EV எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

    ப்ரோடோடைப் மாடல் பிரத்யேக ஏரோடைனமிக் டிசைன் கொண்டுள்ளது. இதன் உருவ அமைப்பு இரண்டாம் தலைமுறை சுசுகி ஹயபுசா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் நடுப்பகுதியில் வி-ஏர் என அழைக்கப்படும் டக்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க உதவும்.

    இந்த எலெக்ட்ரிக் பைக் பின்புறம் 30kW மோட்டார்களையும், முன்புறம் 20kW மோட்டார்களையும் கொண்டுள்ளது. இவை 134 பிஹெச்பி திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் திறனை அடுத்த ஆண்டு வாக்கில் அதிகரித்து பொலிவியா சால்ட் பிளாட்களில் உலக சாதனை படைக்கும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×