search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    அப்ரிலியா ஸ்டாம் 125
    X
    அப்ரிலியா ஸ்டாம் 125

    இந்தியாவில் பி.எஸ்.6 அப்ரிலியா ஸ்கூட்டர் விலை அறிவிப்பு

    அப்ரிலியா நிறுவனத்தின் பி.எஸ்.6 ரக ஸ்கூட்டர்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    அப்ரிலியா நிறுவனத்தின் பி.எஸ்.6 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன. பி.எஸ்.6 ரக அப்ரிலியா ஸ்கூட்டர்களில் எஸ்.ஆர். 160, எஸ்.ஆர். 125 மற்றும் ஸ்டாம் 125 உள்ளிட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    புதிய என்ஜின் தவிர ஸ்கூட்டர்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாத நிலையில், இவற்றின் விலை ரூ. 19 ஆயிரம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் செயல்திறன் அளவுகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய அப்ரிலியா ஸ்டாம் 125 பி.எஸ்.6 விலை ரூ. 86,638 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து எஸ்.ஆர். 125 மாடல் விலை ரூ. 92,181 என்றும், எஸ்.ஆர். 160 ரூ. 1,04,476, எஸ்.ஆர். 160 கார்பன் ரூ. 1,07,570 மற்றும் டாப் எண்ட் மாடலான எஸ்.ஆர். 160 ரேஸ் மாடல் விலை ரூ. 1,13,671 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    அப்ரிலியா எஸ்.ஆர். 150 ரேஸ்

    160சிசி ஸ்கூட்டர்களில் 160 சிசி சிங்கிள் சிலிண்டர், 3 வால்வ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.7 பி.ஹெச்.பி. @7600 ஆர்.பி.எம். மற்றும் 11.6 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 125சிசி ஸ்கூட்டர்களில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 9.4 பி.ஹெச்.பி. @7250 ஆர்.பி.எம்., 9.9 என்.எம். டார்க் @6250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

    அப்ரிலியாவின் அடுத்த மாடலாக எஸ்.எக்ஸ்.ஆர். 160 வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எஸ்.எக்ஸ்.ஆர். 160 மாடலில் 160சிசி மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ரெட், புளூ, வைட் மற்றும் பிளாக் என நான்குவித நிறங்களில் உருவாகி வருகிறது.
    Next Story
    ×