search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 டிரையம்ப் ராக்கெட் 3 ஜி.டி.
    X
    2020 டிரையம்ப் ராக்கெட் 3 ஜி.டி.

    2020 டிரையம்ப் ராக்கெட் 3 இந்திய வெளியீட்டு தேதி

    டிரையம்ப் நிறுவனத்தின் 2020 ராக்கெட் 3 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டிரையம்ப் நிறுவனம் 2020 ராக்கெட் 3 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ராக்கெட் 3 மோட்டார்சைக்கிள் சில மாதங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகமான பின் இந்த மோட்டார்சைக்கிள் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

    புதிய டிரையம்ப் ராக்கெட் 3 மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    ராக்கெட் 3 மோட்டார்சைக்கிளில் 2500 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகளவு உற்பத்தியாகும் மோட்டார்சைக்கிளில் இத்தனை பெரிய திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த என்ஜின் 167 ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம். மற்றும் 221 என்.எம். டார்க் @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

    2020 டிரையம்ப் ராக்கெட் 3 ஆர்

    என்ஜினில் புதிய கிரான்க் கேஸ் அசெம்ப்ளி, லூப்ரிகேஷன் சிஸ்டம் மற்றும் பேலென்சர் ஷேஃப்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளதால் இதன் எடை 18 கிலோ வரை குறைந்துள்ளது. முந்தைய ராக்கெட் சீரிஸ் மாடலை விட புதிய ராக்கெட் 3 எடை 40 கிலோ வரை குறைவாக இருக்கிறது.

    முழுமையான அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கும் புதிய ராக்கெட் 3 மாடலின் சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 47 மில்லிமீட்டர், கம்ப்ரெஷன் மற்றும் ரீபவுன்ட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் மற்றும் ஷோவா பிகிபேக், ரிமோட் அட்ஜஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை 320 எம்.எம். டிஸ்க், பின்புறம் 300 எம்.எம். டிஸ்க் பிரெம்போ எம்4.32, நான்கு பிஸ்டன் கேலிப்பர்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×