என் மலர்

  ஆட்டோமொபைல்

  ஒரே மாதத்தில் 2000 விற்பனையை கடந்த ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மோட்டார்சைக்கிள்
  X

  ஒரே மாதத்தில் 2000 விற்பனையை கடந்த ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மோட்டார்சைக்கிள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயல் என்ஃபீல்டு நிறுவன ஒரே மாதத்தில் 2000 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.  ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் ஒரே மாதத்தில் 2000 யூனிட்களை கடந்துள்ளது. மார்ச் 2019 இல் ராயல் என்ஃபீல்டு 1700 யூனிட்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனையில் சரிவை சந்தித்து வந்தது. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களில் 648 சி.சி. ட்வின்-சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

  இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர் @7250 ஆர்.பி.எம். மற்றும் 52 என்.எம். டார்க் @5250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் உடன் வருகிறது. ஸ்லிப்பர் கிளட்ச் கொண்டு அறிமுகமாகி இருக்கும் முதல் ராயல் என்ஃபீல்டு மாடல்களாக 650 ட்வின் மாடல்கள் இருக்கின்றன.  பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 எம்.எம். ட்வின் பிஸ்டன் பைபர் கேலிப்பர் டிஸ்க்களும், புன்புறம் 240 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரு மோட்டார்சைக்கிள்களிலும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் 41 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க்களும், பின்புறம் டூயல் சஸ்பென்ஷனும் வழங்கப்படுகிறது.

  இந்தியாவில் இன்டர்செப்டார் 650 மாடல் - மார்க் த்ரீ, க்ளிட்டர் மற்றும் டஸ்ட், ஆரஞ்சு கிரஷ், ரேவிஷிங் ரெட், சில்வர் ஸ்பெக்டர் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  கான்டினென்ட்டல் ஜி.டி. 650 மாடல் - டாக்டர் மேஹெம், ஐஸ் குவீன், வென்ச்சுரா புளு, மிஸ்டர் கிரீன் மற்றும் பிளாக் மேஜிக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×