search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    மினி லிமிடெட் எடிஷன் கூப்பர் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    மினி லிமிடெட் எடிஷன் கூப்பர் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • மினி நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் கூப்பர் SE கன்வெர்டிபில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய லிமிடெட் எடிஷன் கார் அதன் 3-டோர் ஹேச்பேக் மாடலை விட வித்தியாசமான ஸ்டைலிங் கொண்டுள்ளது.

    மினி கூப்பர் SE எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை தொடர்ந்து கூப்பர் SE கன்வெர்டிபில் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. ஐரோப்பாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய கூப்பர் மாடல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இந்த கார் மொத்தத்தில் 999 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை கூப்பர் SE கன்வெர்டிபில் மாடல் அதன் 3-டோர் ஹேச்பேக் மாடலை விட வித்தியாசமாக உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடலின் ஃபோல்டிங் ஃபேப்ரிக் ரூஃப் தனித்துவமாக காட்சியளிக்கிறது. இவை தவிர கூப்பர் SE அதன் எலெக்ட்ரிக் மாடல் டிசைனிங் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புறம் E பேட்ஜ் உள்ளது. இத்துடன் பிரத்யேக வீல் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கன்வெர்டிபில் மாடலின் ஃபெண்டரிலும் பேட்ஜிங் உள்ளது. கார் கதவின் சில் கார்டுகளிலும் நம்பர் இடம்பெற்று இருக்கிறது. கன்வெர்டிபில் மாடலின் டோர் ஹேண்டில், ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் உள்ளிட்டவைகளில் பிரான்ஸ் டிடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. மினி லோகோ மற்றும் லெட்டரிங் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    கேபின் டிசைனிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரின் லெதர் இருக்கை மேற்கவர்கள் மற்றும் முன்புறம் ஹீடெட் சீட்கள் ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங், ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பவர்டிரெயினை பொருத்தவரை கூப்பர் SE கன்வெர்டிபில் மாடலில் 180 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 201 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.2 நொடிகளில் எட்டிவிடும். இந்தியாவுக்கு லிமிடெட் எடிஷன் மாடலில் சில யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    Next Story
    ×