search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    முழு சார்ஜ் செய்தால் 707 கிமீ ரேஞ்ச் வழங்கும் எலெக்ட்ரிக் கார்!
    X

    முழு சார்ஜ் செய்தால் 707 கிமீ ரேஞ்ச் வழங்கும் எலெக்ட்ரிக் கார்!

    • ஃபிஸ்கர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 707 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது.
    • புதிய ஃபிஸ்கர் எலெக்ட்ரிக் கார் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கலிஃபோர்னியாவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான ஃபிஸ்கர் தனது ஓசன் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 707 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என WLTP பரிசோதனையில் நிரூபித்து இருக்கிறது. இதுவரை இந்த பரிசோதனையில் கலந்து கொண்ட எந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலும் இத்தகைய ரேஞ்ச் வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டிற்குள் விற்பனைக்கு வர இருக்கும் ஃபிஸ்கர் ஓசன் எலெக்ட்ரிக் எஸ்யுவி, சந்தையில் போட்டி நிறுவன மாடல்களான டெஸ்லா மாடல் X (565 கிமீ ரேஞ்ச்) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் EQS எஸ்யுவி (587கிமீ ரேஞ்ச்) உடன் ஒப்பிடும் போது அதிக ரேஞ்ச் வழங்குகிறது.

    ஃபிஸ்கர் ஓசன் மாடலின் ஸ்போர்ட் வேரியண்ட் முன்புற ஆக்சிலில் 271 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 96.5 கிலோமீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டிவிடும். இதன் அல்ட்ரா வேரியண்டில் 533ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மோட்டார் உள்ளது. இது 3.9 நொடிகளில் மணிக்கு 96.5 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும்.

    புதிய ஃபிஸ்கர் ஓசன் எக்ஸ்டிரீம் வேரியண்டில் 542 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மோட்டார் உள்ளது. இது மணிக்கு 96.5 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். ஸ்போர்ட் மாடலில் 443 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் 17.1 இன்ச் டச் ஸ்கிரீன், பெரிய ஸ்கை ரூஃப், எலெக்ட்ரிக் டெயில்கேட், குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லைட்கள் உள்ளன.

    ஃபிஸ்கர் ஓசன் அல்ட்ரா வேரியண்டில் ஹைப்பர் ரேஞ்ச் பேட்டரி உள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் 628 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. இதிலும் ஸ்கை ரூஃப், ஆட்டோமேடிக் எமர்ஜன்சி பிரேகிங், ரிமோட் வெஹிகில் ஃபைண்டர், டாகில் விண்டோஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    எக்ஸ்டிரீம் வேரியண்டில் ஸ்மார்ட் டிராக்ஷன், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் சார்ஜிங், லேன் சேஞ்சிங் அசிஸ்டண்ஸ், சுழலும் வகையிலான இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளன. ஃபிஸ்கர் ஓசன் மாடலின் பேட்டரி அம்சங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    Next Story
    ×