என் மலர்

  ஆட்டோ டிப்ஸ்

  சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய BYD e6 எலெக்ட்ரிக் கார்
  X

  சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய BYD e6 எலெக்ட்ரிக் கார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சீன எலெக்ட்ரிக் கார் நிறுவனமான BYD சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறது.
  • இந்த கார் அதன் பாதுகாப்பு, ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் சைக்கிள் போன்ற அம்சங்களுக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்று இருக்கிறது.

  சீனாவை சேர்ந்த பி.ஒய்.டி. (BYD) நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் BYD e6 மாடல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. புதிய BYD e6 எலெக்ட்ரிக் எம்.யு.வி. மாடல் ஆறு நாட்களில் 2 ஆயிரத்து 203 கிலோமீட்டர்களை கடந்துள்ளது.

  இந்த கார் டெல்லியில் துவங்கி மும்பை வரை மொத்தம் ஒன்பது நகரங்களை கடந்து இருக்கிறது. பயணத்தின் போது BYD e6 எலெக்ட்ரிக் எம்.யு.வி. மாடல் நான்கு மாநிலங்களை கடந்தது. இதுவரை BYD e6 மாடல் 4.7 கோடி கிலோமீட்டர்களை நிறைவு செய்து உள்ளது. இந்த பயணத்தின் மூலம் 4 லட்சத்து 13 கிராம் கார்பன் மாசு ஏற்படுவதை தவிர்த்து இருக்கிறது.


  இந்தியாவில் பிளேடு பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஆடம்பர எம்.யு.வி. என்ற பெருமையை BYD e6 பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பம் பேட்டரியின் பாதுகாப்பு, ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் சைக்கிள் போன்ற அம்சங்களுக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று இருக்கிறது.

  பேட்டரியில் லித்தியம் அயன் பாஸ்பேட் தொழில்நுட்பம் வழங்கப்படுவதே இத்தகைய பலன்கள் கிடைக்க காரணம் ஆகும். இந்திய சந்தையில் BYD e6 எலெக்ட்ரிக் எம்.யு.வி. மாடலின் விலை ரூ. 29 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் BYD e6 எலெக்ட்ரிக் மாடலை வாடகை வண்டியாக மட்டும் தான் பயன்படுத்த முடியும். இதனை தனி நபர் பயன்பாட்டுக்காக பதிவு செய்ய முடியாது.

  BYD e6 மாடலில் 71.7 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக் உள்ளது. இந்த கார் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த காரை முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும். BYD e6 மாடல் AC மற்றும் DC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

  Next Story
  ×