search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய ஏத்தர் எனர்ஜி
    X

    உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய ஏத்தர் எனர்ஜி

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது வாகன உற்பத்தியில் புது மைல்கல் எட்டி அசத்தி உள்ளது.
    • ஏத்தர் நிறுவன வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது வாகன உற்பத்தி 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையில் ஏத்தர் எனர்ஜி வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. மைல்கல் மட்டுமின்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜூன் மாத விற்பனையில் 800 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2022 ஜூன் மாத வாக்கில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 3 ஆயிரத்து 200-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    இந்திய சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர கடந்த ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன துறையில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி காரணமாக பலர் இவற்றை வாங்க துவங்கி உள்ளனர். வழக்கமான பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மாடல்கள் மாறி வருகின்றன.


    முன்னதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எளிய நிதி சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பலர் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக நிதி சிக்கல் இன்றி வாங்கி வருகின்றனர்.

    சமீபத்தில் தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450X ஜென் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.66 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×