search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    7 சீட்டர் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் - இந்திய வெளியீட்டு விவரம்!
    X

    7 சீட்டர் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் - இந்திய வெளியீட்டு விவரம்!

    • சிட்ரோயன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புது வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • முன்னதாக சிட்ரோயன் நிறுவனத்தின் குறைந்த விலை கார் C3 காம்பேக்ட் ஹேச்பேக் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது C5 ஏர்கிராஸ் பிரீமியம் எஸ்யுவி மாடல் மூலம் 2021 வாக்கில் இந்திய சந்தையில் களமிறங்கியது. பின் இந்த ஆண்டு எண்ட்ரி லெவல் காம்பேக்ட் ஹேச்பேக் பிரிவுக்கு ஏற்ற வகையில் C3 மாடலை அறிமுகம் செய்தது. CMP பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் சிட்ரோயன் C3 அடுத்த ஆண்டு துவக்கத்தில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    2023 ஜனவரி மாத வாக்கில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விலை அடிப்படையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV காருக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து சிட்ரோயன் நிறுவனம் தனது C3 மாடலின் மூன்று ரோ கொண்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ், C3 ஸ்போர்ட் டூரர் அல்லது C3 பிளஸ் போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய சிட்ரோயன் கார் ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் நிறுவனத்தின் 7 சீட்டர் C3 கார் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற காரை வாங்க நினைப்போரை குறி வைத்து உருவாக்கப்படுகிறது. இது மாருதி சுசுகி எர்டிகா மற்றும் கியா கரென்ஸ் போன்ற மாடல்களுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய 7 சீட்டர் சிட்ரோயன் C3 மாடலின் டிசைன் மற்றும் இண்டீரியர் அம்சங்கள் C3 ரெகுலர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக சிட்ரோயன் C3 காரின் 7 சீட்டர் வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி புதிய காரில் ஒரே மாதிரியான கிரில், ஹெட்லேம்ப் மற்றும் பம்ப்பர் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த கார் அதன் ஹேச்பேக் வெர்ஷனை விட சற்றே நீளமாக இருக்கும் என்றும் இதன் பின்புற ஒவர்ஹேங் காரினுள் அதிக பயனர்களுக்கு ஏற்ற இடவசதியை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×