search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஸ்கோடா என்யாக் iV
    X
    ஸ்கோடா என்யாக் iV

    இந்திய சோதனையில் சிக்கிய ஸ்கோடா எலெக்ட்ரிக் கார்

    ஸ்கோடா நிறுவனம் விரைவில் தனது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் காரின் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    எவ்வித மறைப்பும் இன்றி சோதனை செய்யப்படும் ஸ்கோடா எலெக்ட்ரிக் கார், ஸ்கோடா என்யாக் iV 80X எலெக்ட்ரிக், டாப் எண்ட் வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த கார் MEB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலை விட அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் பூட் ஸ்பேஸ் ஸ்கோடா கோடியக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா என்யாக் iV
    Photo Courtesy:  Instagram | harshbhatt723

    ஸ்கோடா என்யாக் iV மாடல் பல்வேறு செயல்திறன் மற்றும் ரேன்ஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. என்யாக் iV 55 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட மாடல் 146 ஹெச்.பி. பவர், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    இதே கார், 177 ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க், 210 பி.ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர்டார்க் மற்றும் 261 பி.ஹெச்.பி. பவர், 425 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. ஸ்கோடா என்யாக் RS மாடல் iV வேரியண்ட் சக்திவாய்ந்த மாடல் ஆகும். 
    Next Story
    ×