search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    கார்
    X
    கார்

    அசத்தல் சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்

    இந்திய சந்தையில் கார் மாடல்கள் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனினும், கார் உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.


    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக கார் மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் செலவீனங்கள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் கார் உற்பத்தியாளர்கள் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன. 

    இவ்வாறு கார்களின் விலை உயர்த்தப்பட்டாலும், வாகன விற்பனையை அதிகப்படுத்த கார் உற்பத்தியாளர்கள் தங்களின் கார்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடியில் கிடைக்கும் கார் மாடல்களை தொடர்ந்து பார்ப்போம்.

     கார்

    மாருதி சுசுகி ஆல்டோ 800- இந்திய சந்தையில் அதிக பிரபலமான ஹேச்பேக் மாடல் ஆல்டோ 800. இதன் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது மாருதி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை ஸ்பெஷல் சலுகை வழங்கப்படுகிறது.

    மாருதி எஸ் பிரெஸ்ஸோ- மைக்ரோ எஸ்.யு.வி. மாடலான எஸ் பிரெஸ்ஸோ வாங்குவோருக்கு மொத்தத்தில் ரூ. 18 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இவை எக்ஸ்சேன்ஜ் போனஸ், சிறப்பு சலுகை மற்றும் கூடுதல் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது. 

    மாருதி சுசுகி வேகன்ஆர்- இந்தியாவில் வேகன்ஆர் மாடலுக்கென தனி வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. இந்த மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 38 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. 

     கார்

    நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 19 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆன்லைன் முன்பதிவு சலுகையாக ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரம் வரையி சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கசார் மாடல் பெரும் எதிர்பார்ப்புடன் விற்பனைக்கு வந்தது. இந்த கார் வாங்குவோருக்கு அதிகபட்சம் 100 சதவீதம் வரையிலான ஆன் ரோடு நிதி சலுகை, மாத தவணைக்கு 7.25 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×