search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரெவோல்ட் ஆர்.வி.400 - ஆர்.வி.300
    X
    ரெவோல்ட் ஆர்.வி.400 - ஆர்.வி.300

    நான்கு நகரங்களில் களமிறங்கும் ரெவோல்ட்

    ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் நான்கு நகரங்களில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ரெவோல்ட் இன்டெலிகார்ப் இந்தியாவில் ஆமதாபாத், மும்பை, சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் வியாபாரத்தை நீட்டிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்சமயம் ரெவோல்ட் ஆர்.வி.300 மற்றும் ரெவோல்ட் ஆர்.வி.400 மோட்டார்சைக்கிள்கள் புனே மற்றும் டெல்லி நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

    அந்த வரிசையில் ஆமதாபாத் நகரில் பிப்ரவரி 29-ம் தேதி புதிய விற்பனையகத்தை திறக்க இருக்கிறது. ஆமதாபாத்தை தொடர்ந்து மார்ச் 2-இல் ஐதராபாத், சென்னையில் மார்ச் 5 மற்றும் மார்ச் மாத இறுதியில் மும்பையில் விற்பனையகங்களை திறக்க இருக்கிறது.

    ரெவோல்ட் ஆர்.வி.400

    ரெவோல்ட் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தியை அதிகரித்து, ஃபிளாக்‌ஷிப் ஆர்.வி.400 மாடலுக்கான காத்திருப்பு காலம் ஐந்து மாதங்களில் இருந்து 90 நாட்களாக குறைத்து இருக்கிறது. ரெவோல்ட் ஆர்.வி.300 மாடலில் 27.3 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மோட்டார்சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். ஆர்.வி.300 மாடல்- நார்மல், இகோ மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    ரெவோல்ட் ஆர்.வி.400 மாடலில் 3.24 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்- நார்மல், இகோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
    Next Story
    ×