search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    நிசான் கிக்ஸ்
    X
    நிசான் கிக்ஸ்

    இணையத்தில் வெளியான நிசான் கிக்ஸ் பி.எஸ்.6 புதிய ஸ்பை படங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நிசான் நிறுவனத்தின் கிக்ஸ் எஸ்.யு.வி. பி.எஸ். 6 வேரியண்ட் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    நிசான் கிக்ஸ் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களின் படி புதிய காரில் புகையை சோதிக்கும் உபகரணம் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர காரின் வடிவமைப்புகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    நிசான் கிக்ஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் XL, XV, XV பிரீமியம் மற்றும் XV பிரீமியம் பிளஸ் என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.5-லிட்டர் H4K பெட்ரோல் என்ஜின் 106 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

    இதன் 1.5 லிட்டர் K9K DCi டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    நிசான் கிக்ஸ் ஸ்பை படம்


    இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான கிக்ஸ் எஸ்.யு.வி. கார் விலை ரூ.9.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் XV பிரீமியம் பிளஸ் வேரியன்ட் விலை ரூ.14.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500, ரெனால்ட் கேப்டூர் மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புகைப்படம் நன்றி: Rushlane

    Next Story
    ×