search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டெஸ்லா சைபர் டிரக்
    X
    டெஸ்லா சைபர் டிரக்

    சர்வதேச சந்தையில் டெஸ்லா எலெக்ட்ரிக் சைபர்-டிரக் அறிமுகம்

    டெஸ்லா நிறுவனத்தின் புதிய சைபர் டிரக் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
    டெஸ்லா நிறுவனத்தின் புதிய சைபர்-டிரக் வாகனத்தை எலான் மஸ்க் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தார். இது முழுமையான எலெக்ட்ரிக் டிரக் ஆகும். ஆஃப் ரோடிங் வசதி கொண்ட சைபர் டிரக் ஆறு பேர் பயணிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 800 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

    புதிய டெஸ்லா சைபர் டிரக் மொத்தம் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஒற்றை மோட்டார் பின்புற வீல் டிரைவல் மாடல், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இதில் அதிகபட்சம் 3400 கிலோவை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.5 நொடிகளில் எட்டிவிடும்.

    இதன் விலை 39,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,64,524) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கிலோமீட்டர் வரை செல்லும்.

    இதில் அதிகபட்சம் 4500 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதன் விலை 49,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,82,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    டெஸ்லா சைபர் டிரக்

    மூன்றாவது வேரியன்ட் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வருகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். இது போர்ஷ் 911 மாடலை விட அதிவேகமானதாகும்.

    இந்த வாகனத்தில் அதிகபட்சம் 6350 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். இதன் விலை 69,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 49,53,689) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
     
    டெஸ்லாவின் புதிய சைபர்-டிரக் உற்பத்தி 2021 ஆம் ஆண்டு துவங்கி 2022 ஆண்டில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×