search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கே.டி.எம். 390 அட்வென்ச்சர் புகைப்படம் லீக்
    X

    கே.டி.எம். 390 அட்வென்ச்சர் புகைப்படம் லீக்

    கே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாரான நிலையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 

    புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கே.டி.எம். தளத்திலேயே உருவாகிறது. புதிய மோட்டார்சைக்கிளின் ப்ரோடோடைப் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் 373சிசி, சிங்கிள் சிலண்டர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் கே.டி.எம். 390 டியூக் மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 390 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. 390 டியூக் மாடலில் 373சிசி, சிங்கிள் சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



    இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. @9500 ஆர்.பி.எம். மற்றும் 35 என்.எம். டார்க் @7000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் ஆஃப்-ரோடிங் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. 

    புதிய புகைப்படங்களில் புதிய எக்சாஸ்ட் மற்றும் கேடலிடிக் கன்வெர்டர் வழங்கப்படுவது உறுதியாகிறது. இதனால் இந்த மோட்டார்சைக்கிள் பாரத் புகை விதி VI மற்றும் யூரோ 5 உள்ளிட்டவற்றுக்கு பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படங்களின் படி கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலின் முன்புறம் 19-இன்ச் சக்கரமும், பின்புறம் 17-இன்ச் சக்கரமும் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் டாப்-எண்ட் ஆர் வெர்ஷனின் முன்புறம் 21-இன்ச் சக்கரமும், பின்புறம் 18-இன்ச் சக்கரமும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் ஃபுல் கலர் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் மின்சாதன உபகரணங்கள் வழங்கப்படுகிறது. 

    புகைப்படம் நன்றி: MCN
    Next Story
    ×