என் மலர்
ராசிபலன்

weekly rasipalan- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்கான வார ராசிபலன்
- வார ராசிபலன்
- 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்
சிம்மம்
லாபகரமான வாரம். ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும்.
பணவசதி சிறப்பாக இருக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். குடும்ப செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும்.
காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும். எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். வரலட்சுமி நோன்பு நாளில் ரோஜா மலரால் மகாலட்சுமியை வழிபடவும்.
கன்னி
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சனி செவ்வாய் சம்பந்தம். கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்தி விரயத்தை சேமிப்பாகவோ, சுப விரயமாகவோ மாற்ற முறையான திட்டமிடல் தேவை. குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும். வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை சுய ஜாதகப் பரிசீலனைக்குப் பிறகு செய்யவும். ஒரு கடனை அடைக்க, மறுகடன் வாங்குவது அல்லது பழைய கடனை அடைக்க, புது கடன் வாங்குவது என்று கடனுக்கு மேல் கடன் கூடிக்கொண்டு போகும்.
சிலருக்கு விருப்ப விவாகம் நடக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. அரசியலில் உள்ளவர்களுக்கு இது நெருக்கடியான நேரம். வரலட்சுமி நோன்பு நாளில் லலிதா சகஸ்ஹர நாமம் படித்து மகாலட்சுமியை வழிபடவும்.
துலாம்
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். மனஉறுதி, தைரியம், நேர்மறை எண்ணம், உதவி செய்யும் மனப்பான்மை கூடும். கடமைகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். ஆயுள் ஆரோக்கியம் கூடும். மருத்துவ செலவுகள் குறையும்.
கௌரவ பதவிகள் உறுதியாகும். பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். பேரன்,பேத்தி யோகம் கிடைக்கும். பாகப்பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும்.
ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். வரலட்சுமி நோன்பு நாளில் மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.
விருச்சிகம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கு சனி பார்வை. பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை இழப்பு ஊதியக் குறைப்பு, அதிக வேலை போன்றவற்றால் அதிருப்தி ஏற்படும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். கோட்சாரம் சற்று சுமாராக இருக்கும் போது பிரச்சினையை விட்டு ஒதுங்கி வாழப் பழகினால் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் எந்த கெடு பலனும் ஏற்படாது. முக்கிய பணிகள் ஆரம்பத்தில் தடை, தாமதங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் காரிய வெற்றியைத் தரும்.
சக்திக்கு மீறிய கடன், தேவையற்ற பேச்சைக் குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உணவு ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். வரலட்சுமி விரத நாளில் மகா லட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.






