என் மலர்tooltip icon

    ராசிபலன்

    weekly rasipalan 26.10.2025 to 1.11.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
    X

    weekly rasipalan 26.10.2025 to 1.11.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    • ரிஷபம் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.
    • சிம்மம் செயல்பாடுகளில் நிலவிய தடைகள் அகலும் வாரம்.

    மேஷம்

    அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். இது விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும்.கடன் தொல்லைகள் குறையும். சேமிப்பு உயரும். பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தை பெற்றுத்த ரும். அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வியாபார சூட்சுமங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். படித்து முடித்த இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிடம் வலிமையாக இயங்கினால் வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழல் உருவாகும். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். சஷ்டியன்று இளநீர் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சம் அடைந்தாலும் ராசியை செவ்வாயும் புதனும் பார்க்கிறார்கள்.வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துவங்குவீர்கள்.வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். பங்குதாரர்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும்.பூர்வீக நிலம் சம்பந்தமாக சகோதரருடன் கருத்து வேறுபாடு வரலாம்.உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். அண்டை அயலாருடன் நல்லி ணக்கம் உண்டாகும்.மழையால் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். விருப்ப விவாகம் நடைபெறும். பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும். 28.10.2025 அன்று இரவு 10.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் குழந்தைகளை சிரத்தையோடு கண்காணிக்கவும்.புதிய எதிரிகள் தலை தூக்குவார்கள். சஷ்டி திதி அன்று முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மிதுனம்

    கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெற்ற 6ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஏற்றமான பலன் கிடைக்கும்.புதிய தொழில் வாய்ப்புகள், முயற்சிகள் மன நிறைவு தரும். அரசு வேலைக்கு முயற்சியில் வெற்றி உண்டாகும். சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். நீண்ட காலமாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். குலதெய்வம், முன்னோர்க ளின் நல்லாசி கிடைக்கும். சிலருக்கு அரசின் இலவச வீட்டுமனை கிடைக் கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நன்மையை தரும்.தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். 28.10.2025 அன்று இரவு 10.14 மணி முதல் 31.10.2025 காலை 6.48 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வீண் மனக்கவலை, முக்கிய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தடை, தாமதம் போன்ற அசவுகரியங்கள் இருக்கும். சஷ்டி திதியில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    கடகம்

    வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசியில் குரு உச்சம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி என உலவுகின்ற கிரக நிலை ஓரளவு உதவிகரமாக உள்ளது. நிறைந்த அறிவு, திறமை இருந்தும் சாதிக்க முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப் பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.கூட்டுத் தொழிலில் திருப்பம் உண்டாகும். சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். பழைய கடன்களை யும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். பெற்றோர் வழியில் சில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும். 31.10.2025 காலை 6.48 மணி முதல் 2.11.2025 அன்று பகல் 11.27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பிடிவாதத் தினை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும்.கந்த சஷ்டியன்று வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    சிம்மம்

    செயல்பாடுகளில் நிலவிய தடைகள் அகலும் வாரம்.ராசிக்கு 4ம்மிடமான சுகஸ்தானத்தில் செவ்வாய் புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இது சிம்ம ராசிக்கு இழந்த இன்பங்களை மீட்டுத் தரும் அமைப்பாகும்.மனதில் புத்துணர்வு உண்டாகும்.தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். தாய் வழி சொத்தில் நிலவிய சர்ச்சைகள் அகலும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். மாணவ-மாணவிகளுக்கு படிக்கும் ஆர்வம் கூடும். அஷ்டம சனியை மீறி சில நல்ல பலன்கள் நடக்கும். அஷ்டமச்சனியின் காலமே சொத்துக்க ளில் முதலீடு செய்வதற்கு உகந்த நேரமாகும். கடன் பிரச்சனைகளை கட்டுப்படுத்து வீர்கள். புத்திரப் பிராப்த்தம் உண்டாகும்.உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும்.2.11.2025 அன்று பகல் 11.27 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.மன சஞ்சலத்தை கட்டுப்படுத்த வேண்டும். உறவுகளிடம் பொறுமையை கடைபிடிப்பதால் நல்லிணக்கம் உண்டாகும். கந்த சஷ்டி அன்றுநெய் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    கன்னி

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி புதன் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் 3ம் அதிபதி செவ்வாயுடன் குருவின் பார்வையில் சேர்க்கை பெற்றுள்ளார். போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற கூடிய வகையில் தைரியமும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். தாய் வழிச் சொத்தில் சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குச் செல்ல நேரும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு மிகைப்படுத்தலான நன்மைகள் உண்டு.ஜாமீன் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும். வீடு வாகனங்களை பழுது நீக்கம் செய்வீர்கள். நல்ல வேலை கிடைக்கும். திருமணத்தடை அகலும்.மறு விவாக முயற்சிகள் சாதகமாகும். லவுகீக வாழ்வில் நாட்டம் மிகும். கந்த சஷ்டி அன்று தயிர் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    துலாம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசியில் நீச்ச சூரியன். ராசி அதிபதி நீச்சம் என முக்கிய கிரகங்கள் சுமாராக உள்ளது.மன சஞ்சலம் அதிகரித்து உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டுவீர்கள். வேலையில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க முடியாத நிலை உருவாகும்.லாபம் நிற்காது அல்லது வருமானம் குறைவுபடும். மாணவ- மாணவிகள் கல்வியில் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.காதலர்கள் பெற்றோரின் நல்லாசியுடன் திருமணம் செய்வது உத்தமம்.சில தம்பதிகள் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம்.தந்தை வழியில் சில பொருள் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.சிலர் முன் கோபத்தால் உறவுகளை பகைத்துக் கொள்வார்கள். அதனால் மன சஞ்சலம் ஆரோக்கியக் கேடு உண்டாகும்.ஆத்மார்த்தமான முருகன் வழிபாட்டால் உங்கள் ஜாதக ரீதியான தோஷங்களையும் சாபங்களையும் தீர்க்க முடியும்.

    விருச்சிகம்

    தன வரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றுள்ளார். 8,11ம் அதிபதி புதனுடன் குரு பார்வையில் சேர்ந்து உள்ளார்.திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுப்பெறுவீர்கள்.எதிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் நன்மதிப்பை பெறுவீர்கள். வர வேண்டிய பணங்களில் ஏதேனும் தடை தாமதங்கள் இருந்தால் இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். கடன் பிரச்சனைகள் குறையும்.புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். திறமை வெளிப்படும். வழக்குகள் சாதகமாகும்.சமுதாய அந்தஸ்து நிறைந்த பெரியோர்களின் நட்பு கிடைக்கும்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன கனவு நனவாகும்.தாய் வழி முன்னோர்களிட மிருந்து நில, புலன், பணம் கிடைக்கும். கந்த சஷ்டி அன்று செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து முருகனை வழிபடவும்.

    தனுசு

    தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார்.எதிர்பார்த்த செயல்கள் நன்மையில் முடியும்.தடைபட்ட சில செயல்கள் தாமாக நடக்கும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரியில் ஏற்பட்ட மனசங்கடங்கள் அகலும். மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினர் ஏற்றம் பெறுவர். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடக்கும்.வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ஆரோக்கி யத்தில் அதிக கவனம் தேவை.சிலருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.கந்த சஷ்டி அன்று 36 முறை கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடவும்.

    மகரம்

    குரு பலத்தால் காரியம் சாதிக்க வேண்டிய வாரம்.ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியன் நீச்சமாக உள்ளார்.சூரியனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் நீச்சம். மகர ராசியினருக்கு தற்போது குரு மற்றும் செவ்வாயின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. இதனால் திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வீடு மாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும்.புதிய வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். அடமான நகை களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். அசை யும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொலிவு பெறச் செய்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும்.திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் தலைக்கு வந்த அனைத்தும் தலைப்பாகையோடு சென்று விடும். கந்த சஷ்டி அன்று முருகனை வழிபட்டு தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    கும்பம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் யோகமான வாரம். தொழில் ஸ்தானத்தில் 3,10ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 5,8ம் அதிபதியான புதனுடன் குரு பார்வையில் இருப்பதால் பண வரவு அமோகமாக இருக்கும்.அடிப்படைத் தேவைகளுக்கு திணறியவர்களுக்கு கூட சரளமான பண புழக்கம் உண்டாகும். குலத் தொழிலில் பங்குதாரராக இணைவீர்கள்.அல்லது குலத்தொழில்களை எடுத்து நடத்து வீர்கள்.இழந்த பதவி தேடி வரும்.உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. உடன் பிறந்தவர்கள் மூலமாக வருமான உயர்வுக்கான பாதை தென்படும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள். காதல் கல்யாண கனவுகள் நனவாகும்.சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.கந்த சஷ்டி அன்று சந்தன அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    மீனம்

    விடா முயற்சிகள் வெற்றி தரும் வாரம்.ராசியில் உள்ள சனிக்கு குரு மற்றும் சுக்ரனின் பார்வை உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகமாகும். இது வரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். வெளிவட்டார செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். தொழிலை இழுத்து மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் கூட வாழ்வில் செட்டிலாக்கி விடும் வகையில் மாற்றமான நல்ல சுப பலன்கள் உண்டாகும். வீடு, நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.சொத்துக்கள் விற்பனையின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும். வாரிசு களுக்கு விரும்பிய அரசு வேலை கிடைக்கும். சிறை தண்டனை அனுபவிப்பவர்களுக்கு நன் நடத்தை காரணமாக விடுதலை கிடைக்கும். ஆன்மீகப் பெரியவர்கள் நட்பு கிடைக்கும்.கந்த சஷ்டி அன்று மஞ்சள் அபிஷேகம் செய்து முருகனை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.

    Next Story
    ×