என் மலர்
ராசிபலன்

weekly rasipalan 14.9.2025 to 20.9.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- ரிஷபம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம்.
- மிதுனம் சிந்தனையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம்.
மேஷம்
புதிய வளர்ச்சிக்கான பாதை உருவாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சம சப்தம பார்வையால் ராசியை பார்க்கிறார். ராசி பலம் பெறுவதால் செயல்பாடுகளில் ஏற்பட்ட தடை தாமதங்கள் அகலும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்த உங்களுக்கு புதிய நம்பிக்கை, தைரியம் கூடும்.
புதிய வீடு கட்டுதல், வீட்டை விரிவு செய்தல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்களால் கூட்டுத் தொழிலில் மந்த நிலை ஏற்படும். வேலைப் பளு சற்று அதிகரிக்கும். சிலருக்கு உஷ்ண நோய் அல்லது கண் தொடர்பான மருத்துவ சிகிச்சை செய்ய நேரும். பருவ வயதினருக்கு திருமணம் நிச்சயமாகும்.
பொருளாதாரம் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் நிறைவு பெறும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். மாணவர்கள் தடைபட்ட படிப்பை மீண்டும் தொடரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மகாளய பட்ச காலத்தில் விலங்குகளுக்கு உணவிடுவதால் பொருளாதார குற்றம் நீங்கும்.
ரிஷபம்
பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு செவ்வாயின் 8-ம் பார்வையும் சனியின் 3ம் பார்வையும் உள்ளது. திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறவினர்களின் அதிர்ஷ்ட சொத்து, பணத்தில் ஒரு பகுதி உங்களுக்கு கிடைக்கும். விவசாயிகள் ரியல் எஸ்டேட் துறையினருக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளது. போட்டி பந்தயங்களைத் தவிர்ப்பது நல்லது.
கடன் தொல்லையில் இருந்து மீள் வதற்கான வழிகள் தெரியும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். தந்தை வழியில் நிலவிய பிரச்சினைகள், சங்கடங்கள் விலகும். மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும். அவர்களின் நட்பு, கூட்டணி மூலம் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். உழைப்பிற்கும், முயற்சிக்கும் உரிய பலன்கள் வந்தடையும். மாற்று முறை வைத்தியத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.புதிய எதிர்பாலின நட்பு உங்களை தேவையற்ற திசைக்கு அழைத்துச் செல்லலாம். எனவே நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். மகாளய பட்ச காலங்களில் அசைவ உணவை தவிர்ப்பதால் வாழ்க்கைப் பயணம் இலகுவாகும்.
மிதுனம்
சிந்தனையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து சனி பார்வையில் உள்ளார். தற்போது இருக்கும் நிலையில் மாற்றங்கள் உண்டாகும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபி விருத்தி உண்டாகும். பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள்.
குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். தொழிலில் நிலவிய இழுபறிகள் விலகி சாதகமான சந்தர்ப்பம் உருவாகும். உத்தி யோகஸ்தர்கள் முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோர்க்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் நன்மை பயக்கும்.
சுப நிகழ்விற்கான அறிகுறிகள் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். இளம் பெண்களுக்கு திருமண தடை நீங்கும். மகாளய பட்ச காலத்தில் வசதியற்ற மாணவ மாணவியர்களின் தேவையறிந்து உதவுவது சிறப்பாகும்.
கடகம்
கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும் வாரம். கடக ராசிக்கு முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் அறிவாற்றல் திறமை அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். வாழ்க்கைத் துணைக்கு இழந்த வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் உண்டு. எப்படி உழைத்தாலும் லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும்.
எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வரும். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்க வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். மாமனாருடன் ஏற்பட்ட மன ஸ்தாபம் விலகும். ஆவணங்கள் தொடர்பான வம்பு, வழக்குகள் சாதகமாகும். உடல் நிலையிலிருந்த பாதிப்புகள் அகலும். அரசு வேலை முயற்சி கைகூடும்.
கல்லூரி படிப்பு தடைபட்டவர்கள் மீண்டும் தொடர முடியும். எதிரிகள் வழியாக ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் அதிகரிக்கும். பெண்களுக்கு தாய் வழிப் பாட்டியின் நகைகள், பணம், பட்டுப் புடவைகள் சீதனமாக கிடைக்கும். மகாளய பட்ச காலங்களில் புனித நீர் நிலைகளில் நீராடுவதால் பாவங்கள் குறைந்து புண்ணிய பலன்களை அதிகரிக்கும்.
சிம்மம்
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்று இருக்கிறார். இது மிக சிறப்பான உன்னதமான கிரக அமைப்பாகும். தன வரவில் ஏற்பட்ட பற்றாக்குறைகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
நினைத்ததை சாதித்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஊர் மாற்றம், வேலை மாற்றம் செய்ய நேரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடம்பர வீட்டைக் கட்ட திட்டமிடுவீர்கள். சிலரின் காதல் தோல்வியில் முடியும்.
பரம்பரைச் சொத்து, முன்னோர்களின் வங்கி சேமிப்பு இவற்றை பங்கிட உற்றார் உறவினர்கள் நிர்பந்திப்பார்கள் ஆடம்பர விருந்து, விழாக்களில் கலந்து இன்பம் அடைவீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். மகாளய பட்ச காலங்களில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
கன்னி
மனோபலத்தால் நன்மைகள் அதிகரிக்கும் வாரம். உச்சமடைந்த ராசி அதிபதி புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். வெளி நாட்டில் வாழ்பவர்கள் எதிர்பார்த்த குடியுரிமை கிடைக்கும். வரவை விட செலவு அதிகரிப்பதால் எதிர்காலம் பற்றிய அச்சம் அதிகரிக்கும். சுப விரயச் செலவுகள் மிகுதியாகும். புதிய வீடு, வாகனத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.
தொழிலில் சகோதரர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். புதிய தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து சர்ச்சையில் தாய்மாமன் ஆதரவாக இருப்பார். சமுதாய அந்தஸ்து நிறைந்த நல்ல வேலை கிடைக்கும். இளம் வயதினருக்கு புத்திர பிராப்தம் கிடைக்கும். தெய்வ கடாட்சம் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் மற்றும் அலுப்பு குறையும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சற்று இழுபறியாகும். வாழ்க்கையை இழந்த ஆண், பெண்களுக்கு மறுமணம் நடக்கும். மகாளய பட்ச காலத்தில் கன்னிப் பெண்களுக்கு ஆடை தானம் வழங்க கன்னிப் பெண் சாபம் விலகும்.
துலாம்
புதிய வளர்ச்சிக்கான பாதை தென்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். இன்சூரன்ஸ், சீட்டு பணம், பங்குச் சந்தை, தொழில் ஆதாயம் என பல வகைகளில் வருமானம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் ஒத்திப் போகும். சகோதர, பங்காளி கருத்து வேறுபாடு நீங்கும்.
உறவுகளின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் கூடும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். திருமணத் தடைகள் அகலும். மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு சொந்த தொழில் செய்யும் எண்ணம் உதயமாகும்.
14.9.2025 அன்று இரவு 8.03க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. மகாளய பட்ச காலங்களில் சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருள்கள் வழங்கி நல்லாசி பெற பெண் சாபங்கள் விலகும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். சக பணியாட்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தொழிலில் நிலவும் எதிர்ப்புகளை எதிர் நீச்சலடித்து வெற்றி பெறுவீர்கள். அரசு உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகளுக்கு மிக மிக சாதகமான நேரம்.
உபரி வருமானத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மாறாக ஸ்திர சொத்துக்களில் முதலீடு செய்யலாம். பெண்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகளால் நிம்மதி உண்டாகும். நிம்மதியான உறக்கம் உண்டாகும். திருமணத்திற்கு நல்ல வரன்கள் அமையும்.
14.9.2025 அன்று இரவு 8.03 முதல் 17.9.2025 அன்று 12.28 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நல்ல ஜீரண சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிடவும். மகாளய பட்ச காலங்களில் உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவ பித்ருக்கள சாபம் நீங்கும்.
தனுசு
புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். 7,10-ம் அதிபதி புதன் உச்சம் பெறுகிறார். மன ரீதியான சங்கடங்கள் விலகும். ஆடம்பர, அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும். தொழிலில் நல்ல விருத்தி உண்டாகும். அனைத்து தொழில் சார்ந்தோரும் ஏதாவது ஒரு வகையில் லாபமும் மன நிறைவும் பெறுவர். சிலருக்கு அரசின் மானியம் கிடைக்கும்.
சிலர் புதிய தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது. கடன், நோய் எதிரிகளிடமிருந்து விடுபடுவீர்கள். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அகன்று திருமணம் நடக்கும். மறுமணத்திற்கு வரன் பார்க்க ஏற்ற நேரம். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். வீடு, வாகனம் மற்றும் சுப நிகழ்விற்காக விண்ணப்பித்த கடன் கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையின் நலனில் அதிக அக்கறை வேண்டும். மறைமுக தொந்தரவு கொடுத்தவர்கள் பலம் இழப்பார்கள். 17.9.2025 அன்று காலை 12.28 முதல் 19.9.2025 அன்று காலை 7.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மகாளய பட்ச காலத்தில் ஆன்மீக குருமார்கள் புரோகிதர்கள் ஆசிரியர்கள் போன்ற வர்களிடம் நல்லாசிகள் பெற குரு சாபம் விலகும்.
மகரம்
மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும் காலம். ராசியில் செவ்வாயின் நான்காம் பார்வை பதிகிறது. பூமி, நிலம், வாகன வகையில் லாபம் உண்டாகும். விவசாயம் செழிக்கும். தொழில் ஸ்தான செவ்வாயால் லாபம் பல மடங்காகும். குடும்பத்தில் நிலையான மகிழ்ச்சி உண்டாகும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வெளியூருக்கு பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும். 19.9.2025 அன்று காலை 7.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய நபர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைக்கவும்.
சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. மகாளய பட்ச காலத்தில் குடிசை வாசிகளுக்கு குடை, செருப்பு, போர்வை தானம் வழங்க சுய ஜாதக ரீதியான பித்ருக்கள் தோஷம் குறையும்.
கும்பம்
புதிய எழுச்சியுடன் வலம் வரும் வாரம். ராசிக்கு சுக்ரன் பார்வை உள்ளது. நிம்மதி இரட்டிப்பாகும். சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். வில்லங்க சொத்திற்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் கிடைக்கும்.தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இறைசக்தியை உணர்வார்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு.
வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். பிள்ளைகள் தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே நல்ல ஒற்றுமை நிலவும். போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவத்தால் குணமடைவார்கள்.
அரசு உயர் அதிகாரிகளின் தனித் திறமைமிளிரும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மகாளய பட்ச காலத்தில் துப்புரவு தொழிலாளிகளின் தேவையறிந்து உதவுவதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
மீனம்
மாற்றங்கள் உண்டாகும் வாரம். தன ஸ்தான அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்க்கிறார். தற்பொழுது உங்கள் நிலையில் உயர்வு உண்டாகும். லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபிவிருத்தி உண்டாகும். வெளி வட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆடம்பர, தேவைகள் நிறைவேறும். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்க வாய்ப்பு உள்ளது. பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளு படியாகி தீர்ப்பு சாதகமாகும்.
பெண்களின் திறமைகள் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பிரமிக்க வைப்பதாக இருக்கும். தந்தை வழியில் நிலவிய பிரச்சினைகள், சங்கடங்கள் விலகி ஆதரவு கிடைக்கும். மகாளய பட்ச காலத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் வழங்க குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.






