என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 1.11.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமண முயற்சி வெற்றி தரும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்துமுடிப்பீர்கள்.
ரிஷபம்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். உறவில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மிதுனம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
கடகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இயலாது. தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிம்மம்
யோகமான நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். சொத்துகளால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
கன்னி
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணங்களால் கையிருப்பு கரையலாம்.
துலாம்
நன்மைகள் நடைபெறும் நாள். புதிய திட்டமொன்றை செயல்படுத்த முற்படுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.
தனுசு
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மேலதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பர். உணவில் கட்டுப்பாடு தேவை.
மகரம்
செலவுகள் கூடும் நாள். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
கும்பம்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். உறவினர்களின் சந்திப்பு உண்டு.
மீனம்
விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.






