என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024
உதிரி வருமானங்கள் வந்து உள்ளம் மகிழும் நாள். எதைச் செய்தாலும் தெளிவாக சிந்தித்து செய்வீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024
பாக்கிகள் வசூலாகி பண வரவு திருப்தி தரும் நாள். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024
பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலைபேசி மூலம் நல்ல செய்தியொன்று வந்து சேரும். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024
காரிய வெற்றிக்கு கணபதியை வழிபட வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்குப் புதியவர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024
திறமைகள் பளிச்சிடும் நாள். திடீர் வரவும், தெய்வீக சிந்தனையும் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024
தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி புதியவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். அரசில்வாதிகளால் அனுகூலம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். கல்யாண வாய்ப்பு கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வருமான பற்றாக்குறை ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.






