என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். வாகன யோகம் உண்டு. பங்காளிகளிடம் ஏற்பட்ட பகை அகலும். இடமாற்றம் இனிமை தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024
தடைகள் அகலும் நாள். தன்னம்பிக்கை கூடும். பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024
கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொலைதூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்துசேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024
விரக்திகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் கைகூடும். நண்பர்கள் ஆதரவோடு தடைகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றம் வந்துசேரலாம். நீண்ட நாளையப் பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024
முயற்சி கைகூடும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் பலன் தருவதாக அமையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024
நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024
தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபார விரோதம் உண்டு. விட்டுப்போன வரன்களை பற்றிய கவலை அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வீண் விரோதங்கள் வரலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வெளிவட்டார பழக்கத்தில் பகை ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு குறையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள் உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உள்ளன்போடு பழகியவர்களின் உதவி கிடைக்கும். தேகநலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வியாபார போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். சகோதர வழியில் அனுகூலம் கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனக்கலக்கங்கள் அகலும். நீங்கள் எதிர்பாராத காரியம் எளிதில் முடிவடையும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையும். சொத்துகளால் லாபம் உண்டு.






