என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன்சுமை குறைய சில ஏற்பாடுகளை செய்வீர்கள். பயணங்களால் தேக நலன் பாதிக்கப்படலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்துசேரும். கொள்கை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கட்டிட பணி தொடரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024
கடன்சுமை குறையும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். பிள்ளைகள் வழியில் விரயம் உண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் சீராக நடைபெறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024
பக்குவமாகப்பேசி பாராட்டுகளை பெறும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மேலதிகாரிகள் மதிப்பு கொடுப்பர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
மனக்கசப்புகள் மாறி மகிழ்ச்சி கூடும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் சிலர் நாடி வந்து உதவி செய்வர். புதிய பாதை புலப்படும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். தொழில் கூட்டாளிகள் ஒத்துழைக்க மறுப்பர். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
நூதன பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.






