என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். 

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். தொழில் நலன் கருதி முக்கியப் புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025

    சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். பிள்ளைகளின் கல்யா ணம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மிதுனம்

    12.01.2025 முதல் 18.01.2025 வரை

    மிகப் பொன்னான காலம். ராசி அதிபதி புதன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். முன்பு ஏற்பட்ட நஷ்டங்கள் இப்பொழுது பணமாக காய்க்கும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களை தேடி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். வெளிநாட்டு குடியுரிமை சாத்தியமாகும். பதவி உயர்வு கிடைத்து பொறுப்புகள் அதிகரிக்கும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகும். உயர்கல்வி, மருத்துவகல்விகள், ஆராய்ச்சி சார்ந்த கல்விகள் போன்ற கல்வி பயில சிறப்பான காலம். பொங்கல் விடுமுறைக்கு பூர்வீகம் சென்று வருவீர்கள். குல, இஷ்ட, தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும் திருமணத் தடை அகலும்.

    விரும்பிய வரன் கைகூடும். விரும்பிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் தாமதம் உள்ள தம்பதியினர் உரிய மருத்துவம் செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்கும். பவுர்ணமி திதியில் நடராஜரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025

    தனவரவு திருப்தி தரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025

    மனக்கலக்கம் அகலும் நாள். பழகிய சிலருக்காக பணத்தை செலவிடும் சூழ்நிலை உருவாகும். பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025

    இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். எதிர்பார்த்த காரியம் எளிதில் நடைபெறும். புதிய தொழில் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025

    செலவுகள் கூடும் நாள். செய்தொழில் மந்தமாக இருக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025

    யோகமான நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். தேக நலன் கருதி ஒரு தொகையை செலவிடுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025

    தொட்ட காரியம் வெற்றிபெறும் நாள். தொழில் முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கவனமுடன் பழகுவது நல்லது.

    ×