என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லை உண்டு. பயணங்களால் பிரச்சனை ஏற்படும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025
கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. விரயம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025
அடுத்தவருக்கு உதவி ஆனந்தம் காணும் நாள். சேமித்த தொகையில் சிறிது கரையலாம். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025
தொட்டது துலங்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போட்ட காரியம் ஒன்று இன்று திடீரென முடிவாகும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
வருமானம் திருப்தி தரும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தேவையான பொருட்களை வாங்க அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். சமூக நலப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025
சுறுசுறுப்பாக செயல்படும் நாள். துணிந்து எடுத்த முடிவு மனக்கலக்கத்தை அகற்றும். வீடு, கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025
புது முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் மாறும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்திசெய்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025
துன்பங்கள் தூளாகும் நாள். உடன்பிறப்புகளின் ஆதரவு உண்டு. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை கண்டுகொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உடல்நலம் சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025
இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025
உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வ பலம் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக்கொடுப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.






