தொழில்நுட்பம்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ் டேப் இந்தியாவில் அறிமுகம்

Published On 2017-08-30 06:58 GMT   |   Update On 2017-08-30 06:58 GMT
மைக்ரமேக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் பிளெக்ஸ் டேப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரேஸ் நௌ நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள புதிய டேப்லெட் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:  

மைக்ரோமேக்ஸ் மற்றும் இரோஸ் நௌ நிறுவனங்கள் இணைந்து புதிய கேன்வாஸ் பிளெக்ஸ் டேப் வெளியிட்டுள்ளன. புதிய டேப்லெட் இரோஸ் நௌ சேவையை பயன்படுத்த ஒரு ஆண்டு சந்தாவுடன் வழங்கப்படுகிறது. இரோஸ் நௌ சேவையை கொண்டு பல்வேறு மொழிகளில் கிடைக்கும் திரைப்படங்கள், மியூசிக் வீடியோ, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும். 
  
இரோஸ் நௌ சேவைக்கு ஒரு ஆண்டு சந்தா வழங்கப்படுகிறது. புதிய டேப்லெட்டில் 8.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் DTS சவுண்டு, 4ஜி வோல்ட்இ மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

புதிய டேப்லெட் சாதனத்தின் முழுமையான சிறப்பம்சங்கள் வெளியிடப்படாத நிலையில், இதன் விற்பனை செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டேப்லெட் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News