தொழில்நுட்பம்
பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் ஆல்காடெல் ஏ3 10
ஆல்காடெல் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஏ3 10 டேப் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆல்காடெல் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஆல்காடெல் ஏ3 10 டேப் என அழைக்கப்படுகிறது. புதிய டேப்லெட் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என ஆல்காடெல் அறிவித்துள்ளது.
பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆல்காடெல் ஏ3 10 டேப் ஆணட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 10.0 இன்ச் 1280x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய டேப்லெட் 4ஜி எல்டிஇ, வை-பை, ஜிபிஎஸ், ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி ஒடிஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆல்காடெல் நிறுவனத்தின் பிளிப் போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆல்காடெல் கோ பிளிப் என அழைக்கப்படும் புதிய பீச்சர் போன் 2.8 இன்ச், 240x320 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 4ஜி எல்டிஇ, 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 482 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.