அறிந்து கொள்ளுங்கள்

கால்பந்து உலக கோப்பையை ஒட்டி புது சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

Published On 2022-12-07 08:02 GMT   |   Update On 2022-12-07 08:02 GMT
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சலுகையை அறிவித்து இருக்கிறது.
  • ஏர்டெல் வழங்கும் டேட்டா பேக் சலுகையின் விலை ரூ. 301 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய ஜியோ ரூ. 222 விலை சலுகையில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த சலுகையில் அழைப்புகளோ அல்லது வேலிடிட்டி போன்ற பலன்களோ இடம்பெறவில்லை. புதிய கால்பந்து டேட்டா பேக் பிரீபெயிட் சலுகை பயன்படுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த சலுகையை பெறும் முன் ஏற்கனவே ஒரு சலுகையில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய ரூ. 222 சலுகையை ரிலையன்ஸ் ஜியோ "Football World Cup Data Pack" என அழைக்கிறது. எனினும், இந்த சலுகை உலக கோப்பை கால்பந்து தொடர் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து வழங்கப்படும் என்றே தெரிகிறது. எதுவாயினும், இந்த சலுகையை தேர்வு செய்வோர் ஏற்கனவே ரிசார்ஜ் செய்திருக்கும் முதன்மை சலுகை நிறைவு பெறும் போது இதற்கான வேலிடிட்டி முடிந்து விடும்.

ஜியோ ரூ. 222 4ஜி டேட்டா பேக் விவரங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையில் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை விவரங்கள் மைஜியோ செயலியில் இடம்பெற்று இருக்கிறது. கூடுதல் டேட்டா பயனர் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையில் உள்ள அன்றாட டேட்டா தீர்ந்ததும் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணத்தை பொருத்தவரை புது சலுகையில் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 4.44 செலவாகிறது. இது போட்டி நிறுவனங்களை விட குறைவு ஆகும்.

ஏர்டெல் நிறுவனம் 50 ஜிபி டேட்டாவை ரூ. 301 விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் ரூ. 6.02 ஆகும். ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையை ஆன்லைன் வலைதளம் அல்லது ரிடெயில் ஸ்டோர் சென்று நேரடியாகவும் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

Tags:    

Similar News