அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 499 விலையில் புது பிராண்ட்பேண்ட் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்

Published On 2022-11-08 14:51 IST   |   Update On 2022-11-08 14:51:00 IST
  • பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
  • புது பிஎஸ்என்எல் பைபர் பிராட்பேண்ட் சலுகையின் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலை பிராட்பேண்ட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது பழைய பெயரில் கிடைக்கும் புது சலுகை ஆகும். ரூ. 499 சலுகை பிஎஸ்என்எல் பைபர் சேவையின் பேசிக் திட்டம் ஆகும். முன்னதாக இந்த சலுகை ரூ. 449 விலையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ. 449 பிஎஸ்என்எல் சலுகை அதே பலன்களுடன் வேறு பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய ரூ. 499 சலுகை தற்போது பிஎஸ்என்எல் பைபர் பேசிக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பழைய ரூ. 449 சலுகை பைபர் பேசிக் நியோ என அழைக்கப்படுகிறது. இரு சலுகைகளும் வழங்கப்படும் பலன்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலையில் பிராட்பேண்ட் சலுகையை வழங்கி வந்துள்ளது. எனினும், கடந்த சில காலமாக இந்த சலுகை நீக்கப்பட்டு இருந்தது.

தற்போது பிஎஸ்என்எல் ரூ. 499 சலுகையில் 40Mbps வேகத்தில் 3.3TB வரையிலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இத்துடன் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் தள்ளுபடி, அதிகபட்சம் ரூ. 500 வரை தள்ளுபடி பெறும் வசதி வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 449 பைபர் பேசிக் நியோ சலுகையில் முன்பை போன்றே 30Mbps வேகத்தில் மாதம் 3.3TB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இரு சலுகைகள் தவிர பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 775 மற்றும் ரூ. 275 போன்ற சலுகைகளை விரைவில் நீக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு சலுகைகளும் சுதந்திர தினத்தை ஒட்டி விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டவை ஆகும்.

Tags:    

Similar News