புதிய கேஜெட்டுகள்

மார்ச்-இல் புது சாதனங்கள் அறிமுகம் செய்யும் ஆப்பிள் - என்னென்ன தெரியுமா?

Published On 2024-01-29 12:12 GMT   |   Update On 2024-01-29 12:12 GMT
  • புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.
  • மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என தகவல்.

ஆப்பிள் நிறுவனம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில், மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட ஐபேட் ஏர், அளவில் பெரிய ஐபேட் ஏர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் மேக்புக் ஏர் மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் M3 பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 


புதிய ஐபேட் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களுடன் புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். 17.4 வெர்ஷனின் முதல் பீட்டாவில் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை ஐபேட் ப்ரோவில் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இத்துடன் ஃபேஸ் ஐ.டி. கேமராவும் வழங்கப்படுகிறது.

2024 ஐபேட் மாடலில் புதிய OLED ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் இவற்றில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News