புதிய கேஜெட்டுகள்

டைனமிக் ஐலேண்ட் வசதியுடன் ஐபோன் SE 4 - லீக் ஆன புது தகவல்

Published On 2024-02-09 11:35 GMT   |   Update On 2024-02-09 11:35 GMT
  • ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடல் தொடர்பான தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், புதிய ஐபோன் SE 4 மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

முந்தைய தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலின் டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் SE 4 மாடலில் நாட்ச் நீக்கப்பட்டு டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டைனமிக் ஐலேண்ட் அம்சத்தினை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகப்படுத்தியது.

 


பிறகு, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 சீரிசின் அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட்டது. புதிய ஐபோன் SE 4 குறித்து டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டுள்ள தகவல்களில், "புதிய ஐபோன் SE 4 மாடலின் டிசைன் தற்போது உருவாக்கப்படும் ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்," என தெரிவித்தார்.

இத்துடன் ஐபோன் SE நான்காம் தலைமுறை மாடலில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அளவீடுகளை பொருத்தவரை ஐபோன் SE 4 ஆப்பிள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ஐபோன் XR போன்றே இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 4 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், ஆப்பிளின் 5ஜி சிப்செட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படலாம். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2022-ம் ஆண்டு ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில், இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 900 என துவங்கியது.

Tags:    

Similar News