புதிய கேஜெட்டுகள்

ஐபோன் 15 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் - விலை ரூ. 6.68 லட்சம் தான்..

Published On 2024-03-14 09:38 GMT   |   Update On 2024-03-14 09:38 GMT
  • ஐபோன் 15 ப்ரோ சீரிசின் புது வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
  • விலை மற்ற சாதனங்களை போன்றே அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி போன் மாடல்களை தங்கம் அல்லது வைரம் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து ஸ்பெஷல் எடிஷன் மாடல்களாக வெளியிடுவதில் புகழ்பெற்ற நிறுவனம் கேவியர். ஏற்கனவே விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு அலங்கரித்து அவற்றின் விலையை கேவியர் மேலும் அதிகப்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில், கேவியர் நிறுவனம் ஐபோன் 15 ப்ரோ சீரிசின் புது வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. புது வெர்ஷன் ஆப்பிள் விஷன் ப்ரோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ விசேஷ எடிஷனில் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் குறிப்பிட்ட பாகங்கள் இடம்பெற்று இருக்கும். இதன் விலை கேவியரின் மற்ற சாதனங்களை போன்றே அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

 


ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் வட்ட வடிவ வென்ட்கள் மற்றும் ஆரஞ்சு அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ்புறத்தில் விஷன் ப்ரோ முன்புற டிசைனை பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இந்த டிசைன் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என இரு மாடல்களிலும் கிடைக்கிறது.

விலையை பொருத்தவரை கேவியர் வடிவமைத்த ஆப்பிள் விஷன் ப்ரோ தழுவிய ஐபோன் 15 ப்ரோ 8 ஆயிரத்து 060 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் என்று துவங்குகிறது. கேவியர் ஃபியூச்சர் கலெக்ஷன் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கும் புதிய ஐபோனுடன் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் டெஸ்லா சைபர் டிரக் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

 


கேலக்ஸி S24 அல்ட்ரா சைபர் டிரக் எடிஷனில் டெஸ்லாவின் சைபர் டிரக் மாடலை தழுவிய டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் சைபர் டிரக் தோற்றம் கொண்டிருக்கிறது. மேலும் சைபர் டிரக் ஹெட்லைட் நிறம், சைபர் டிரக்-இல் பயன்படுத்தப்பட்ட மெட்டல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News